யுவராஜ் - சச்சின் - சேவாக் யூகம் - கலக்குமா இந்தியா ? - இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத 7 அடுக்கு பாதுகாப்பு

Monday, March 28, 2011


இந்தியா பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடையே இடையே பெரும் எதிர் பரப்பை ஏற்படுத்தி உள்ளது . 2011  உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தினை காண இந்தியா,பாகிஸ்தான்   ‌தலைவர்கள் வருவதால்   தேசிய பாதுகாப்புப்ப‌டையினர் பஞ்சாப் மாநிலத்தை தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதி போட்டி பஞ்சாப் மாநிலம்‌ மொகாலியில் நாளை மறுநாள்  30ம் தேதி நடக்கிறது. ‌போட்டி மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியை இந்தியா வருமாறு பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான், பிரதமர் கிலானி, அதிபர் சர்தாரி ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் கிலானி போட்டியை காண இந்தியா வருவதாக உறுதியளித்துள்ளார். கிலானி இந்தியா வருகை‌‌யையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

 
ஏற்கனவே பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிலானி தங்கவிருக்கும் தாஜ் ஹோட்டல் முழுவதும் தேசிய பாதுகாப்புப்படையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது. 150க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன. தாஷ் ‌ஹோட்டலைச்சுற்றி 1200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாராமிலிட்டரியும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியாக இருந்தாலும் இந்தியா வீரர்கள் பாகிஸ்தானை வீரர்களை துவம்சம் செய்ய காத்திருக்கிறார்கள் . குறிப்பாக யுவராஜ் சிங்  இந்த உலக கோப்பை தொடரில் சிறந்த பார்மில் இருப்பாதலும், சொந்த ஊர் என்பதாலும் ரசிகர்ளின் மத்தியில் யுவராஜின் மீது பெரும் எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது,மேலும் சச்சின் டெண்டுல்கர் முழு பார்மில் இருப்பதால் பாகிஸ்தான் வேக பந்து வீச்சாளர்களுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருப்பார். அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியை சேர்த்து தனது 100 சதத்தை பூர்த்தி செய்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து  காத்துள்ளனர்.கடந்த சில போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்க தவறிய  வீரேந்தர் சேவாக் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் எதிர்  அணிக்கு பெரும் தலை வலியாக இருப்பார்.எந்த போட்டியிலும் சரியாக ஆடாமல் சொதப்பி வரும் கேப்டன் மகேந்தர சிங் தோனி இந்த போட்டியாலவ்து தன்னுடைய மானத்தை காப்பாற்றி கொள்வாரா?

0 comments:

Post a Comment