உலகசெய்திகள் : ஜப்பான் நிலநடுக்கம் 8.9 ரிக்டர் அளவுகோலாக பதிவாகி உள்ளது

Friday, March 11, 2011

ஜப்பான் நேரப்படி பிற்பகல் 2.46 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் 5 சக்திவாய்ந்த நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. அதன் அளவீடுகள் 7.1 என்ற ரிக்டர் அளவில் இருந்தன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 என்ற அளவில் இருந்தது. எனினும் 8.4 ரிக்டர் அளவில் இருந்ததாக ஜப்பான் தெரிவித்தது.

 ஜப்பான் நிலநடுக்கம் 8.9 ரிக்டர் அளவுகோலாக பதிவாகி உள்ளது. ஜப்பான் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று சுனாமி தாக்கியது.

 இதனால் யாரும் உயிரிழந்தார்களா என்பது குறித்து  தகவல் எதுவும் இல்லை. எனினும் கடற்கரைச் சாலைகளில் ஏராளமான கார்கள் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டன. இதனுடன் வீடுகள் ,பாலங்கள் அடித்து செல்லபட்டன. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசுபிக்கின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது .

ஜப்பானில்  தொலை  தொடர்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டன என்று அங்கிருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கன்றன . கயாம், தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் அமெரிக்காவின் ஹவாயிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

டோக்கியோவின்  விமானநிலையம் மூடபட்டுள்ளுதுஇது மிகவும் அரிதான நிலநடுக்கம், சேதங்கள் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரிக்கலாம் என ஜப்பான் பேரிடர் மேலாண்மை மையத்தின் அலுவலர் ஜூனிச்சி சவதா தெரிவித்தார்.


ஜப்பான் நிலநடுக்கம் பற்றிய வீடியோ மற்றும் இமேஜ் இணைக்கப்பட்டுள்ளது.

செய்திகள்: ஜப்பான் நிலநடுக்கம் நிலவரம் | ஜப்பான் நிலநடுக்கம் பாதிப்பு ,சேதம் | ஜப்பான் தற்போதைய நிலவரம் |ஜப்பான் நிலநடுக்கம் குறித்த முக்கிய செய்திகள் 





0 comments:

Post a Comment