யுவராஜ் - சச்சின் - சேவாக் யூகம் - கலக்குமா இந்தியா ? - இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத 7 அடுக்கு பாதுகாப்பு

Monday, March 28, 2011


இந்தியா பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடையே இடையே பெரும் எதிர் பரப்பை ஏற்படுத்தி உள்ளது . 2011  உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தினை காண இந்தியா,பாகிஸ்தான்   ‌தலைவர்கள் வருவதால்   தேசிய பாதுகாப்புப்ப‌டையினர் பஞ்சாப் மாநிலத்தை தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
READ MORE - யுவராஜ் - சச்சின் - சேவாக் யூகம் - கலக்குமா இந்தியா ? - இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத 7 அடுக்கு பாதுகாப்பு

பலன் பல தரும் ஆஞ்சனேயர்

Sunday, March 27, 2011

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணச் செட்டி தெருவில் அமைந்துள்ளது திருவேங்கடமுடையான் கோவில். இதற்கு முன்பகுதியில் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாம் ஸ்ரீபக்த ஆஞ்சனேயர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோவில் அமைந்த விதமே சற்று வித்தியாசமானது. பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களில் யாரோ ஒருவர் ஒரு சிறிய ஆஞ்சனேயர் சிலையை கோவிலின் முன்பகுதியில் வைத்துவிட்டுச் சென்று விட்டார். பெருமாளை வணங்க வரும் பக்தர்கள் அந்த ஆஞ்சனேயர் சிலைக்கும் கற்பூரம் ஏற்றி துளசி மாலை அணிவித்து வழிபட ஆரம்பித்தார்கள். நாளடைவில் அந்த சிலைக்கு கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று பக்தர்கள் மனதில் தோன்றியது. இதை கோவில் தர்மகர்த்தாவிடம் கூறி, அந்த இடத்திலேயே ஆஞ்சனேயருக்கு கோவில் கட்ட அனுமதி கேட்டனர். அவர் சிறிதும் யோசிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்தார்.

பிறகு கோவில் பணிகள் பக்தர்களது பொருளுதவியாலும் உழைப்பாலும் சிறப்புற துவங்கி மிக அற்புதமாக நிறைவேற்றப்பட்டது. விக்ரம் வருடம், சித்திரை மாதம் 28-ஆம் தேதி, புதன்கிழமையன்று ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா முன்னிலையில் வேத விற்பன்னர்களால் திரளான பக்தர்கள் சூழந்திருக்க சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோவில் கட்ட ஆரம்பித்த நாள் முதல் முடியும் வரை தினமும் காலை முதல் மாலை வரை மாருதி ஒன்று எதிரில் உட்கார்ந்து ஆலயப் பணிகளைக் கவனித்த வண்ணம் இருந்தது ஆச்சரியமான விஷயம்! ஆஞ்சனேயரின் அருள் அனைவருக்கும் உண்டு; அவர் நம்மை எப்பொழுதும் கைவிடாமல் காப்பார் என்பதற்கு இது சான்றாகத் திகழ்கிறது.

இங்கு வரும் பக்தர்கள் தாங்கள் பிரார்த்தனைகள் எண்ணியபடி நிறைவேறுகிறது என்று உளமாரக் கூறுகிறார்கள். இந்த ஆஞ்சனேயருக்கு ஒன்பது வாரம் துளசி மாலை அணிவித்து நெய் விளக்கேற்றி வழிபட்டால் எல்லாவித நோய்களும் தீர்ந்துவிடுகிறது என்கிறார்கள் பக்தர்கள். அமாவாசையன்று பூஜையில் வைத்த செந்தூரக்கயிறை வாங்கி கையில் கட்டிச் செல்கின்றனர். இது எப்பொழுதும் நம்மை காக்கும் கவசமாகத் திகழ்கிறது.

இந்தக் கோவிலின் 12-ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு விமரிசையாக நடைபெறவுள்ளது.
READ MORE - பலன் பல தரும் ஆஞ்சனேயர்

நடிகர் விஜய் ஜெயலலிதாவிற்கு ஆதரவு

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் 2011 சட்டமன்ற தேர்தலில் புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு  ஆதரவு தெரிவித்துள்ளது.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்துக்காக திருச்சியில் தங்கியுள்ளார். அவரை நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் இன்று பிற்பகல் சந்தித்து பேசினார். மூன்றாவது தடவையாக ஜெயலலிதாவும் எஸ்.ஏ.சந்திர சேகரனும் சந்தித்து பேசுவது குறிப்பிடதக்கது.

செய்தியாளர்களை  எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திந்து பேசியதாவது:

விஜய்யின் ‘மக்கள் இயக்கம்’ அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யும்.   மக்கள் இயக்கத்தை  சார்ந்த அனைவரும்  அதிமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார்கள்.  இதை நான் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கிறேன்.எஸ்.ஏ.சந்திரசேகரன் திறந்த வேனில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்’’ என்று கூறினார்.

எது எப்படி இருந்தாலும், விஜய் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்பது அவருடைய ரசிகர்ளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

READ MORE - நடிகர் விஜய் ஜெயலலிதாவிற்கு ஆதரவு

ஆஸ்திரேலியாவை பழிக்கு பழி வாங்கியது இந்தியா - அரை இறுதியில் இந்தியா -பாகிஸ்தான் மோதல்

Thursday, March 24, 2011

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ஆமதாபாத்தில் நடைபெற்ற 2 வது கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
2003 உலககோப்பை கிரிக்கெட்  இறுதி போட்டியில் இந்தியா மோசமான ஆட்டத்தால் உலககோப்பை வாய்ப்பை நழுவவிட்டது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை, இந்தியா உலககோப்பை போட்டியில் தோற்கடித்து பழிக்கு பழி வாங்கியது  இந்தியா என்பது குறிபிடதக்கது.


டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிக்கி பாண்டிங் 118 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் ஜாகீர்கான், அஸ்வின், யுவராஜ் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.சச்சின்,சேவாக் தொடக்க  ஆட்டம் சிறப்பாக இருப்பது இந்திய அணிக்கு குடுதல் பலம். யுவராஜ்  மற்றும் சுரேஷ்  ரைனா  ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு  இந்தியா உலககோப்பை  கண்டிப்பாக  வெல்லும் என்ற நம்பிக்கையை  அதிகரித்துள்ளது. கேப்டன் டோனி  தொடர்ந்து மோசமாக விளையாடி வருவதால் ரசிகர்களிடையே டோனி மீது உள்ள நம்பிக்கை குறைந்துவருகிறது.

அரை இறுதியில் இந்தியா -பாகிஸ்தான் வருகிற மார்ச் 30 -ம் தேதி மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளது.
இந்தியா -பாகிஸ்தான் கடும் போட்டி நிலவும் என்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர் பரப்பு எழுந்து வருகிறது .
READ MORE - ஆஸ்திரேலியாவை பழிக்கு பழி வாங்கியது இந்தியா - அரை இறுதியில் இந்தியா -பாகிஸ்தான் மோதல்

மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு மனைவி இன், எஸ்.வி.சேகர் அவுட்

Wednesday, March 23, 2011

நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அக்கட்சியினரிடம்  கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி சிறுது காலம் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார்.பின்னர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் தாக்கல் செய்யும் விருப்ப மனுவை முதன் முதலாக எஸ்.வி.சேகர்-தான் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் கொடுத்தார்.ஆனால் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் எஸ்.வி.சேகர் பெயர் இடம்பெறவில்லை. மயிலாப்பூர் தொகுதியில் ஜெயந்தி தங்கபாலு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்
காங்கிரஸ் கட்சியில் அறிமுகம் இல்லாத நபர்கள் போட்டி இடுகிறார்கள் என்று அக்கட்சியை சார்ந்தவகர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள்ளது குறிப்பிட தகுந்தது.


அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் அக்கட்சியின் இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை இணைச் செயலர் ஆர். ராஜலட்சுமி போட்டியிடுகிறார்.
READ MORE - மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு மனைவி இன், எஸ்.வி.சேகர் அவுட்

அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் தல தலதான்...

Tuesday, March 15, 2011

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிக்கும்  மங்காத்தா படம்  முடிவதற்குள் அஜித்தின் அடுத்தப் படமான பில்லா இரண்டாம் பாகம்  அவர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பில்லா படம் முதல் பாகம்  ஆல்ரெடி ஹிட் படமாக அமைந்ததால் பில்லா 2 படத்திலும் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நினைத்து அதற்கான முழு  உடற்பயிற்சியில் இறங்கி இருக்கிறார் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார்.

 மே 1, அஜீத் பிறந்த நாளன்று மங்காத்தா படம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. மே மாதத்தின் முதல் வாரத்தில் பில்லா 2 படபிடிப்பு துவங்குகிறது.  பில்லா 1  இருந்த உடல் தோற்றத்தை  கொண்டுவர அஜீத் உடற்பயிற்சியில் இறங்கி உள்ளார்.இதற்காக 10 -லிருந்து 15 கிலோ எடையை குறைக்க உள்ளாராம் அஜீத்.

மங்காத்தா படம் எடிட்டிங் மட்டுமே முடிந்துள்ள நிலையில் படத்தை பார்த்த தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தல தலதான் என்று பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்காக புது விதாமன இசையை தமிழ் ரசிகர்களுக்கு தந்து ஆச்சர்ய படுத்த உள்ளார்.
READ MORE - அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் தல தலதான்...

புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் ஆரம்பம்

புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா, தி.மு.க கோட்டை என வர்ணிக்கப்படும்  மதுரையில் தன் சூறாவளி தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். வருகின்ற 2011 சட்டமன்ற  தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். 

மதுரையில் இருந்து ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்குகிறார். வருகிற 18-ந் தேதி விமானம் மூலம் மதுரை வரும் அவர், விமான நிலையத்தில் இருந்து வேனில் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட பாண்டி கோவிலுக்கு வருகிறார்.

அந்த கோவில் முன்பிருந்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். பின்னர் அங்கிருந்து வில்லாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர் ஆகிய பகுதிகளுக்கு வேனில் வந்து பிரச்சாரம் செய்கிறார்.  
READ MORE - புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் ஆரம்பம்

அமைதிக்காக உலகம் சுற்றும் இந்திய வாலிபன்



உலக அமைதிக்காக  16 -வது  வயதிலிருந்து  தனது பயணத்தை சைக்கிளில் தொடங்கிய ரவி ,42 வயதிலும்  தனது பயணத்தை தற்போதும் மோட்டார் சைக்கிளில்  தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இதுவைரை சைக்கிளில் 1 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக... பைக்கில்  4 
லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக பயணம் செய்து கொண்டே இருக்கும் ரவி,சென்னையை சார்ந்தவர் என்பது தமிழகத்திற்கு பெருமை.

ஜப்பான்,ஆஸ்திரேலியா, சுவிட்சார்லந்து,பெல்ஜியம் ,ஹாலந்து,இத்தாலி ஆகிய வெளி நாடுகளில்  பயணம் மேற்கொண்ட ரவி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பைக் மூலம் சுற்றிவந்துள்ளார் என்பது குறிப்பிடதகுந்தது.

ரவி இதை பற்றி கூறும் போது,நான் புகழுக்காகவோ அல்லது சாதனைக்காகவோ இந்த பயணத்தை மேற் கொள்ளவில்லை.உலக அமைதிக்காக இதற்கு முன்பு பல தலைவர்கள் போராடியுள்ளனர்.அதேபோல் என்னால் முடிந்த ஒரு செயலை செய்கிறேன்.
READ MORE - அமைதிக்காக உலகம் சுற்றும் இந்திய வாலிபன்

தி .மு.க. ,அ.தி.மு.க கூட்டணி விபரம்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி .மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு.

தேர்தல் அறிக்கையை 19 -ந் தேதி முதல்வர் மு.கருணாநிதி வெளியிடுகிறார்.

அ.தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க .வுக்கு  8  தொகுதிகள் வைகோ மறுப்பு, தொடர்கிறது பேச்சுவார்த்தை.

அ.தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்டுக்கு 12 தொகுதிகள்.

அ.தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 10  தொகுதிகள்.
READ MORE - தி .மு.க. ,அ.தி.மு.க கூட்டணி விபரம்

நடிகர் விஜய் கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும் சத்யராஜ் -சீமான் பரபரப்பு பேச்சு

Monday, March 14, 2011

 டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ள புதிய படம் , சட்டப்படி குற்றம்.விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் ,மற்றும் மனைவி கீதா விஜய் ஆகிய இருவரும் குத்துவிளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தனர்.இசை வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா மற்றும்  விஜயகாந்த் கொடுக்க  விஜய் பெறுகிறார் என்றெல்லாம் வெளியான ஓவர் பில்ட்அப் நடக்காவிட்டாலும்  இந்த படத்தின் இசை வெளியீட்டு  விழா சென்னை  கமலா தியேட்டரில் பரப்பாக நடந்தது. 

விஜய் அரசியலுக்கு வரவேண்டாம்....

விஜய்யின் அரசியல் பிரவேச திட்டத்திற்கு எதிராக ஒலித்த அந்த குரல், கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரம் செட்டியாருடையது. தனது 18 ஆண்டுகால நண்பர் எஸ்.ஏ.சி.,க்கு அ‌ட்வைஸ் செய்யும் வகையில் அவர் பேசினார். ஒரு விஷயத்தை சொன்னா சார் கோவிச்சுக்கக் கூடாது. நீங்க கட்சி ஆரம்பிங்க. எலக்ஷன்ல நில்லுங்க. அது உங்க விருப்பம். ஆனால் விஜய்க்கு இதெல்லாம் வேணாம். ஏன்னா, இப்படிதான் சிவாஜி சார் கட்சி ஆரம்பிக்கணும்னு சொன்னப்போ நான் வேணாம்னு தடுத்தேன். அவரு கேட்கல. கடைசி காலத்துல எங்க வீட்டுக்கு எந்த அரசியல்வாதியும் வரக் கூடாதுங்கற அளவுக்கு வெறுத்து போயிருந்தார். அதனால்தான் சொல்றேன். விஜய் நல்ல நடிகர். ஹாலிவுட்ல நடிக்கிற அளவுக்கு அவர் வளரணும், என்று எதிர்ப்பை பதிவு செய்தார் சிதம்பரம்.

சத்யராஜ் பரபரப்பு பேச்சு ..

விழாவில் சத்யராஜ் பேசியதாவது,விஜய் அரசியலுக்கு வருவதா, வேண்டாமா ? என்ற விவாத மேடையாக இது  மாறிவிட்டது. விஜயை ஹாலிவுட் தரத்துக்கு  கொண்டு போக  டைரக்டர் ஷங்கர்,மணிரத்தினம் ஆகியோர் இருக்கிறார்கள். சிதம்பரம் செட்டியார் இங்கே பேசியபோது விஜயை சிவாஜியுடன் ஒப்பிட்டு பேசினார். அரசியலில் சிவாஜியுடன் விஜயை ஏன் ஓப்பிட  வேண்டும் ? இன்னொரு மூன்றெழுத்துக்காரர் எம்.ஜி,ஆருடன்  ஓப்பிடலாமே ? எம்.ஜி, ஆரைப் போன்று விஜய்யின்  செல்வாக்கும் இந்த நாட்டுக்கு பயன்பட வேண்டும்.

சீமான் பரபரப்பு பேச்சு ..

டைரக்டர்ரும்,நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் பேசும்போது ,'' தம்பி விஜய் கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும்.நல்லவர்கள் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்க  கூடாது.யார் மக்களை நேசிக்கிறார்களோ அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் '' என்று அழைப்பு விடுத்தார்.

எஸ்.ஏ.சி. சந்திரசேகர் பரபரப்பு பேச்சு ..

விழாவில் எஸ்.ஏ.சி. சந்திரசேகர் பேசியதாவது, சட்டப்படி எதெல்லாம் குற்றம் என்று பிரித்து மேய்ந்தார். ஐம்பது லட்ச ரூபாய் செலவு செய்து தேர்தலில் ஜெயித்துவிட்டு ஐநூறு கோடி ரூபாய் கொள்ளை அடிப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? ஊரில் உள்ள காதலர்களையெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் சேர்த்து வைக்கிற போலீஸ் அதிகாரி தன் மகள் லவ் பண்ணினால் அவர்களை பிரிக்க நினைப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? என்று அடுக்கடுக்காக கேட்டவர், இந்த படத்தை பார்க்காமல் இருந்தால்தான் சட்டப்படி குற்றம் என்று தன் பேச்சை முடித்தார். 


விழாவை சிறப்பித்தவர்கள்  

தமிழ் திரைப்பட சங்க தயாரிப்பாளர்கள்  சங்க தலைவர் ரா.ராமநாராயணன் தமிழ் திரைப்பட சங்க தயாரிப்பாளர்கள் செயலாளர் சிவசக்தி பாண்டியன்
தென்னிந்திய
திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகன்நாதன்
டைரக்டர்கள்
எந்திரன்
ஷங்கர்,கேப்டன் பிரபாகரன் ஆர்.கே.செல்வமணி ,ஏ .வெங்கடேஷ் ,பேரரசு
திரைப்பட  அதிபர்கள்
கலைபுலி எஸ் .தாணு,எடிட்டர் மோகன் ,
ஜென்டில்மேன் கே.டி. குஞ்சுமோன் 
இசையமைப்பளர் விஜய்  ஆண்டனி
நடிகர்கள்
ஜீவா,விக்ராந்த்,ஹாரிஸ் கல்யாண்
நடிகை
பானு

READ MORE - நடிகர் விஜய் கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும் சத்யராஜ் -சீமான் பரபரப்பு பேச்சு

கறுப்புதான் எனக்கு பிடித்த கலர் ....

கறுப்புதான் பிடித்த கலர் என்ற சினிமா பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபல நடிகை மீண்டும் நடிக்க ஆசை வந்து விட்டதாம்.அவருடைய கணவர்  மறுபடியும் நடிக்க  கூடாது என்று தடை உத்தரவு  போட்டு இருக்கிறாம்.ஆனால்,தனக்கு  பிடித்த இசையை கேட்கும்  போது எல்லாம் நடிகை  மா..கா...வின் கால்கள் அவரையும் மீறி தாளம் போடுகிறதாம். பிரபல நடிகை இப்போது இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்படத்தக்கது.
READ MORE - கறுப்புதான் எனக்கு பிடித்த கலர் ....

உலகசெய்திகள் : ஜப்பான் நிலநடுக்கம் 8.9 ரிக்டர் அளவுகோலாக பதிவாகி உள்ளது

Friday, March 11, 2011

ஜப்பான் நேரப்படி பிற்பகல் 2.46 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் 5 சக்திவாய்ந்த நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. அதன் அளவீடுகள் 7.1 என்ற ரிக்டர் அளவில் இருந்தன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 என்ற அளவில் இருந்தது. எனினும் 8.4 ரிக்டர் அளவில் இருந்ததாக ஜப்பான் தெரிவித்தது.
READ MORE - உலகசெய்திகள் : ஜப்பான் நிலநடுக்கம் 8.9 ரிக்டர் அளவுகோலாக பதிவாகி உள்ளது

வேலூரில் மயான கொள்ளை திருவிழா கோலாகல கொண்டாட்டம்

Saturday, March 5, 2011

அங்காளபரமேஸ்வரி  அம்மன்
வேலூர் மற்றும் அதனை  சுற்றியுள்ள கிராம புறங்களில் மயான கொள்ளை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடவுளை போன்று வேடம் இட்டு  பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

விழாவை சிறப்பிக்கும் வகையில் வேலூர்,ஆரணி ,குடியாத்தம், தோட்டப்பாளையம்,சத்துவாச்சாரி,விருதம்பட்டு,காட்பாடி பகுதியை சேர்ந்த மக்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து  ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

கொசப்பாளையம்  சோலாபுரி அம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு சாகம்பரி அலங்காரம் சிறப்பாக நடந்தது.18 வகையான காய்கறிகளால் அம்மனை அலங்கரிக்கபட்டிருந்தது.


வேலூர் கோவில்களில் சக்தி வாய்ந்த தெய்வங்களுள் அங்காளபரமேஸ்வரி அம்மனும் ஒன்றாகும்.
READ MORE - வேலூரில் மயான கொள்ளை திருவிழா கோலாகல கொண்டாட்டம்