நடிகர் விஜய் கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும் சத்யராஜ் -சீமான் பரபரப்பு பேச்சு

Monday, March 14, 2011

 டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ள புதிய படம் , சட்டப்படி குற்றம்.விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் ,மற்றும் மனைவி கீதா விஜய் ஆகிய இருவரும் குத்துவிளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தனர்.இசை வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா மற்றும்  விஜயகாந்த் கொடுக்க  விஜய் பெறுகிறார் என்றெல்லாம் வெளியான ஓவர் பில்ட்அப் நடக்காவிட்டாலும்  இந்த படத்தின் இசை வெளியீட்டு  விழா சென்னை  கமலா தியேட்டரில் பரப்பாக நடந்தது. 

விஜய் அரசியலுக்கு வரவேண்டாம்....

விஜய்யின் அரசியல் பிரவேச திட்டத்திற்கு எதிராக ஒலித்த அந்த குரல், கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரம் செட்டியாருடையது. தனது 18 ஆண்டுகால நண்பர் எஸ்.ஏ.சி.,க்கு அ‌ட்வைஸ் செய்யும் வகையில் அவர் பேசினார். ஒரு விஷயத்தை சொன்னா சார் கோவிச்சுக்கக் கூடாது. நீங்க கட்சி ஆரம்பிங்க. எலக்ஷன்ல நில்லுங்க. அது உங்க விருப்பம். ஆனால் விஜய்க்கு இதெல்லாம் வேணாம். ஏன்னா, இப்படிதான் சிவாஜி சார் கட்சி ஆரம்பிக்கணும்னு சொன்னப்போ நான் வேணாம்னு தடுத்தேன். அவரு கேட்கல. கடைசி காலத்துல எங்க வீட்டுக்கு எந்த அரசியல்வாதியும் வரக் கூடாதுங்கற அளவுக்கு வெறுத்து போயிருந்தார். அதனால்தான் சொல்றேன். விஜய் நல்ல நடிகர். ஹாலிவுட்ல நடிக்கிற அளவுக்கு அவர் வளரணும், என்று எதிர்ப்பை பதிவு செய்தார் சிதம்பரம்.

சத்யராஜ் பரபரப்பு பேச்சு ..

விழாவில் சத்யராஜ் பேசியதாவது,விஜய் அரசியலுக்கு வருவதா, வேண்டாமா ? என்ற விவாத மேடையாக இது  மாறிவிட்டது. விஜயை ஹாலிவுட் தரத்துக்கு  கொண்டு போக  டைரக்டர் ஷங்கர்,மணிரத்தினம் ஆகியோர் இருக்கிறார்கள். சிதம்பரம் செட்டியார் இங்கே பேசியபோது விஜயை சிவாஜியுடன் ஒப்பிட்டு பேசினார். அரசியலில் சிவாஜியுடன் விஜயை ஏன் ஓப்பிட  வேண்டும் ? இன்னொரு மூன்றெழுத்துக்காரர் எம்.ஜி,ஆருடன்  ஓப்பிடலாமே ? எம்.ஜி, ஆரைப் போன்று விஜய்யின்  செல்வாக்கும் இந்த நாட்டுக்கு பயன்பட வேண்டும்.

சீமான் பரபரப்பு பேச்சு ..

டைரக்டர்ரும்,நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் பேசும்போது ,'' தம்பி விஜய் கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும்.நல்லவர்கள் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்க  கூடாது.யார் மக்களை நேசிக்கிறார்களோ அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் '' என்று அழைப்பு விடுத்தார்.

எஸ்.ஏ.சி. சந்திரசேகர் பரபரப்பு பேச்சு ..

விழாவில் எஸ்.ஏ.சி. சந்திரசேகர் பேசியதாவது, சட்டப்படி எதெல்லாம் குற்றம் என்று பிரித்து மேய்ந்தார். ஐம்பது லட்ச ரூபாய் செலவு செய்து தேர்தலில் ஜெயித்துவிட்டு ஐநூறு கோடி ரூபாய் கொள்ளை அடிப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? ஊரில் உள்ள காதலர்களையெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் சேர்த்து வைக்கிற போலீஸ் அதிகாரி தன் மகள் லவ் பண்ணினால் அவர்களை பிரிக்க நினைப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? என்று அடுக்கடுக்காக கேட்டவர், இந்த படத்தை பார்க்காமல் இருந்தால்தான் சட்டப்படி குற்றம் என்று தன் பேச்சை முடித்தார். 


விழாவை சிறப்பித்தவர்கள்  

தமிழ் திரைப்பட சங்க தயாரிப்பாளர்கள்  சங்க தலைவர் ரா.ராமநாராயணன் தமிழ் திரைப்பட சங்க தயாரிப்பாளர்கள் செயலாளர் சிவசக்தி பாண்டியன்
தென்னிந்திய
திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகன்நாதன்
டைரக்டர்கள்
எந்திரன்
ஷங்கர்,கேப்டன் பிரபாகரன் ஆர்.கே.செல்வமணி ,ஏ .வெங்கடேஷ் ,பேரரசு
திரைப்பட  அதிபர்கள்
கலைபுலி எஸ் .தாணு,எடிட்டர் மோகன் ,
ஜென்டில்மேன் கே.டி. குஞ்சுமோன் 
இசையமைப்பளர் விஜய்  ஆண்டனி
நடிகர்கள்
ஜீவா,விக்ராந்த்,ஹாரிஸ் கல்யாண்
நடிகை
பானு

0 comments:

Post a Comment